மின்னல் வேகத்தில் ரயில்வே துறை – நயினார் பெருமிதம்..!

Advertisements

மின்னல் வேகத்தில் செல்லும் தமிழகத்தின் இரயில்வே துறைக்கான வளர்ச்சி உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது மத்திய பட்ஜெட் குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில்,மின்னல் வேகத்தில் செல்லும் தமிழகத்தின் இரயில்வே துறைக்கான வளர்ச்சி என்றார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்ப் பரப்புரையைத் துகிலுரிக்கும் விதமாக, தமிழகத்தின் இரயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு 7 ஆயிரத்து 611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.இது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட மொத்த பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிகம் என்பதை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாகக் கூறினார். இந்தத் திட்டம், ஒட்டுமொத்தத் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம், போக்குவரத்து, சுற்றுலா, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றின் வளர்ச்சியைப் பெரிதளவில் மேம்படுத்தும்  என்று தெரிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு பல வளர்ச்சித் திட்டங்களைத் தொலைநோக்குப் பார்வையுடன் அள்ளித் தரும் பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சரவைக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *