Drug Trafficking In Chennai Airport: திரைப்பட பாணியில் நடந்த கடத்தல்!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த போதைப்பொருளான கொக்கையின் கடத்தி  வந்த நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டார்.

12 கோடி ரூபாய் மதிப்பிலான 1.2 கிலோ தடை செய்யப்பட்ட கொகைன் போதை பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு எத்தோப்பின் ஏர்லைன்ஸ் மூலம் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது நைஜீரிய நாட்டைச் சேர்ந்த பயணியை சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த சுங்கத்துறையினர் அவரை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது நைஜீரிய வாலிபர் தனது உடலுக்குள் மர்ம பொருள் வைத்திருந்ததை ஸ்கேன் கருவி மூலம் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் விமான நிலைய மருத்துவர்களை வைத்து உடலில் இருந்த மர்ம பொருளை எடுத்துப் பார்த்தபோது. 71 உருளைகள் கொண்ட இந்தியாவில் தடை செய்யப்பட்ட விலை உயர்ந்த போதைப்பொருளான கொக்கையின் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து நைஜீரியா வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 1.201 கிராம் கொக்கின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 12 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *