Chennai School Holiday: 5 வது நாளாக விடுமுறை!

Advertisements

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (8.12.2023) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.இதுகுறித்து அரசு கூறும்போது, ’’மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4.12.2023  முதல் 7.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.  புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் நாளை (8.12.2023) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *