Vengadu Panchayat: ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது புகார்!

Advertisements

வெங்காடு ஊராட்சியில் பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பணியை அவரது கணவர் குறுக்கீடு செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி வார்டு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் புகார் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெங்காடு ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த அன்னக்கிளி உலகநாதன் ஊராட்சி மன்ற தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

அவரின் பணியை அவரது கணவர் வெங்காடு உலகநாதன் மேற்கொண்டு வருவதாகவும் பல்வேறு ஊராட்சி பணிகளில் குறுக்கீடு செய்து முறைகேடான முறையில் கணக்கு காண்பிப்பதும் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டங்களில் கிராம சபை வரவுச் செலவுக் கணக்குகளை ஊராட்சி மன்ற சபையில் காண்பிப்பதில்லை எனவும் வார்டு உறுப்பினர்கள்புக்கர் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவரின் மீது புகார் தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுநல மனுவாக வார்டு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மேலும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் ஊராட்சி மன்றத்தில் வரவு செலவினை பொதுமக்கள் மத்தியில் படிக்கக் சொன்னபோது நான் புதியதாகப் பணிகள் சேர்ந்துள்ளேன் எனக்கு எந்த விவரமும் தெரியாது ஆகையால் கிராம சபை கூட்டத்தில் வரவுச் செலவு தீர்மானத்தைப் படிக்கமாட்டேன் எனத் தெரிவித்ததை தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதாகவும் இவ்வாறு அலட்சியப் போக்கைக் கையாளும் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தனது பணியை அவரது கணவர் வெங்காடு உலகநாதன் மேற்கொண்டு வருவதால் இவ்வளவு குழப்பங்களும் ஏற்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் நேரில் மனு அளித்து அடுத்து வரும் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கள் கிராம பகுதிக்கு வருகை புரிந்து அவரின் முன்னிலையில் அனைத்து வரவு செலவுகளையும் பொதுமக்கள் மத்தியில் படித்தால் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும் என வார்டு உறுப்பினர்கள தெரிவித்தனர்.

இதில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் வெங்காடு ஊராட்சி மன்றத்தைச் சார்ந்த ஐந்தாவது வார்டு உறுப்பினர் முருகன், இரண்டாவது வார்டு உறுப்பினர் அஸ்வினி வினோத், ஆறாவது வார்டு உறுப்பினர் இந்திராணி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *