எங்கள் உறவு மிகவும் ஸ்பெஷல்..!

வர்த்தகம், ராணுவம், சீனா பயணம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர். இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ஒரு சிறந்த தொலைபேசி உரையாடலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

வர்த்தகம், ராணுவம், ஏப்ரல் மாதத்தில்  சீனாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம் குறித்தும், தைவான், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, சோயாபீன் எண்ணிக்கையை 20 மில்லியன் டன்களாக உயர்த்துவது உள்ளிட்ட ஆலோசனை நடத்தியதாகக் கூறினார்.

சீனா உடனான உறவும், ஜி ஜின்பிங் உடனான தனது தனிப்பட்ட உறவும் மிகவும் நல்ல ஒன்று என்றும் பல நேர்மறையான முடிவுகள் அடையப்படுமென நம்புவதாகத் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *