இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கல..!

Advertisements

தவெக கட்சியில் இருப்பவர்கள் வம்பிழுத்தால் தன்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் இன்னும் விஜய்யையும், தவெகவையும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை என்றும் தமிழ்நாடு அரசியலில் என்றும் தன் பேச்சை மாற்றிப் பேசுவதில்லை என்றும் தெரிவித்தார். தவெக கட்சியில் இருப்பவர்கள் வம்பிழுத்தால் தன்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும் என்றார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்று கூறினார். ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் பிரச்சனையை உருவாக்கியதே திமுக என்றும் ஆனால் மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் இதற்கு பலி ஆடாகிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *