பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியா?

Advertisements
திமுக ஆட்சி பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது சமூக வலைத்தளப் பதிவில், மகளிர் திட்டத்தின் கீழ் எனது சகோதரிகள் கணக்கில் வரவு வைத்துள்ளேன் என்று முதலமைச்சர் மார்தட்டுகிறார். அப்படியென்றால், தகுதி இல்லை என்று நீங்கள் நீக்கிய ஏறத்தாழ ஒரு கோடி தமிழ்ப் பெண்கள் உங்களுடைய சகோதரிகள் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இப்படி உண்மைக்குக் கொஞ்சம் கூட நெருக்கமற்ற சூழ்ச்சி கோட்பாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, இன்னும் எத்தனை நாட்கள் பூச்சாண்டி அரசியல் செய்து மக்களை ஏமாற்றப் போகிறீர்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும், இல்லந்தோறும் உங்கள் மகளிர் ராணுவப் படை செல்லும் போது, திமுக ஆட்சி பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா என்று விமர்சித்தார். இதையடுத்து, திமுக எனும் ஓடாத ஓட்டை எஞ்சினை, மக்கள் விரட்டி அடிக்கப் போவது தான் இந்த சட்டமன்றத் தேர்தலின் ஒரே கதை என்று பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *