Advertisements

கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மங்கலம், வேடந்தவாடி, கருமாரப்பட்டி, கொத்தந்தவாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பெய்த மழையில் பள்ளி மாணவர்கள் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர். இந்த கனமழையால் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பூ உள்ளிட்ட பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Advertisements


