Advertisements

ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில், குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது.
இமாச்சலபிரதேசம், தர்மசாலாவில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் அதிரடியாக விளையாடிய ரஜத் படிதார் 93 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 ஓவர்களில் 162 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது.
இதில் சிறப்பாக விளையாடிய ராகுல் திவேட்டியா 68 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் பெங்களூரு அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Advertisements



