Paris Olympics:இந்தியாவிற்கு 3ஆவது பதக்கம் – துபபாக்கி சுடுதலில் ஸ்வப்னில் குசலே சாதனை!

பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் தற்போது நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 3ஆவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33ஆவது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரம்மாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 6ஆவது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் 50மீ ஏர் ரைபிள் 3 பொஷிசன்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. ஆண்களுக்கான தனிநபர் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே 451.4 புள்ளிகள் பெற்று 3ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கு 3ஆவது வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *