ஐ.பி.எல் 2026-லிருந்து வெளியேறியது சென்னை!

Advertisements
ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டியில் சென்னையை வீழ்த்தி 89 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் 19 ஆவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 66 ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது. இதில், சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 84 ரன்களும், சுப்மன் கில் 64 ரன்களும், ஜாஸ் பட்லர் 57 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 13 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம், குஜராத் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதே சமயம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *