துண்டு துண்டாக சிதறும் ஐரோப்பா? இறங்கி ஆடிய டிரம்ப்..!

Advertisements

மத்திய கிழக்கில் நடைபெற்று வர கூடிய  மோதல் போக்கு , தற்பொழுது சர்வதேச அளவில் பல நாடுகளிளிலும் , எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது .. இந்நிலையில் , டிரம்ப் ஈரான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் , அதற்கு தற்பொழுது விளக்கமும் கொடுத்துள்ளார்.. இந்நிலையில் , ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதில் வெற்றி பெற்றிருந்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலிலிருந்து, இஸ்ரேல் உள்ளிட்ட வளைகுடாப் பிராந்தியத்தைக் காப்பாற்றவே, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

மேலும், B2 குண்டுவீச்சு விமானங்கள் மூலம் நாம் அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். நாம் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்திருக்கும்; இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகியவை துண்டு துண்டாகச் சிதறிப்போயிருக்கும் என்றார்.மட்டுமின்றி, ஈரானின் இராணுவத் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும், ஈரானியத் தலைமை பலவீனமடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா விரும்பியபடி முன்னேறவில்லை என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.அத்துடன், ஈரான் விவகாரத்தில் ஒரு முடிவு தெரியாமல் அமெரிக்கா இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவராது என்றும் அவர் வலியுறுத்தினார். அமெரிக்கா முன்கூட்டியே வெளியேறி, இன்னும் மூன்று ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு பிரச்சினை மீண்டும் ஏற்பட அனுமதிக்கப் போவதில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் விலை உயர்ந்துள்ளது உண்மையே என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஆனால், இந்த மோதல் முடிவுக்கு வரும்போது ஈரானிடம் அணு ஆயுதங்கள் இல்லை என்ற ஆறுதல் இருக்கும் என்றார். ஈரானை அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதித்தால், உலகம் பெரும் ஆபத்தில் சிக்கும். எனவே, அப்படி ஒரு நிலையை அனுமதிக்க முடியாது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் , ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் தனது சிறப்புமிக்க Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பு மட்டுமின்றி Iron Beam எனப்படும் மேம்பட்ட லேசர் ஆயுதம் ஒன்றையும் வழங்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் இனி ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் என்றே கூறப்படுகிறது.மத்திய கிழக்கில் மேம்பட்ட லேசர் அமைப்பை நிறுவுவது, இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான அடுத்தகட்ட நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் , ஈரானின் பதிலடி ஐக்கிய அரபு அமீரகம் மீது உக்கிரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த லேசர் அமைப்பு என்பது இஸ்ரேலின் நம்பிக்கைக்குரிய நண்பர் என்ற வகையிலேயே அளிக்கப்பட்டுள்ளது.. இஸ்ரேல் அளித்துள்ள இந்த Iron Beam லேசர் ஆயுதமானது குறுகிய தூர ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களைத் தாக்கி காற்றில் கரைத்துவிடும்.லெபனானிலிருந்து ஹிஸ்புல்லாவின் எறிகணைகளுக்கு எதிராக Iron Beam லேசர் ஆயுதத்தை முதன்முதலில் இஸ்ரேல் பயன்படுத்தியது.

பிப்ரவரி தாக்குதலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் மீது 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2,000 ட்ரோன்களை ஈரான் ஏவியுள்ளது.ஈரானியத் தாக்குதலுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயல்படுத்தியதை அடுத்து, ஈரானின் பெரும்பாலான எறிகணைகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

மேலும் , ஐரோப்பாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தின் பலத்தை குறைக்கப் போவதாக  டிரம்ப் ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் மீண்டும் , ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள உறவு விரிசலை தொடர்ந்து, ஜெர்மனியில் இருந்து 5000 வீரர்களை அமெரிக்க ராணுவம் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. குறிப்பாக ஈரான் விவகாரத்தில் ஜெர்மனியிடம் இருந்து போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.அத்துடன் உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தை ஜெர்மனி கையாண்ட விதமும் அமெரிக்கா-ஜேர்மனி இடையே உறவு விரிசலை ஏற்படுத்தி இருந்தது.

ஜேர்மனியில் இருந்து திரும்பும் இராணுவ வீரர்களின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கு திரும்புவார்கள் என்றும், மற்ற வீரர்கள் பிற முக்கியமான மூலோபாய இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியை தொடர்ந்து ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்று என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனென்றால், சமீபத்தில் ஜேர்மனி, ஸ்பெயின், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்க துருப்புகள் திரும்ப பெறப்படலாம் என்று டிரம்ப் சூசகமாக எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே நிலவி வரும் அரசியல் கசப்புணர்வே இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கை ஜேர்மன் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) விமர்சித்ததே டிரம்பின் இந்த கோபத்திற்கு வித்திட்டதாகக் கூறப்படுகிறது.ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா “அவமானப்படுத்தப்பட்டதாக” ஜேர்மன் அதிபர் மெர்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடியாக டிரம்ப் இந்தத் துருப்புக்கள் குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டிலும் டிரம்ப் இதே போன்ற ஒரு முடிவை எடுத்திருந்தார், ஆனால் அப்போது அதிபராக வந்த ஜோ பைடன் அந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் டிரம்ப் அதிபரான நிலையில், இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ராணுவக் குறைப்பு நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்பதை மறக்காமல் கமெண்டில் பதிவிடுங்கள்..!

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *