
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். மேலும், பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வீர்கள். துணையுடன் நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. முக்கிய முடிவுகள் எடுக்கலாம். பணியிடத்தில் கடினமான பணிகளைக் கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. நீங்கள் நம்பிக்கையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பணிகள் காணப்படுவதால் குறித்த நேரத்தில் பணிகளைச் செய்து முடிக்க இயலாது. துணையுடன் தவறான புரிந்துணர்வு ஏற்படும். பணபுழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்காது.முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் சகபணியாளர்களுடன் குழப்பமான உறவுமுறை உண்டாகும். குடும்ப பிரச்சனை ஒன்றின் காரணமாகத் துணையுடன் வீண் விவாதம் ஏற்படும். கடன் வாங்கவும் நேரிடும். ஆரோக்கியத்தில் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு வெற்றி பெரும் நாளாக இருக்கிறது. பணியிடத்தில் சிறந்த பணிகளைப் பெறுவீர்கள். சிறப்பாகப் பணியாற்றி மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி இருவரிடையே காணப்படும் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். நிதிநிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. உங்களிடம் வருத்தமான மன நிலை காணப்படும். பணியிட சூழலைப் பொறுத்தவரை புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துணையுடன் நல்லுறவு பராமரிக்க இயலாது. தேவையற்ற செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கண் சம்பந்தமான பிரச்சினை ஏற்படலாம்.
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்காது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க இயலாது. துணையுடன் சூடான விவாதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படும். தாய்க்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. உங்களிடம் பதட்டமும் வருத்தமும் காணப்படும். பணியிடத்தில் அதிகப் பணிகள் காணப்படும். இதனால் பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. துணையுடன் அகந்தைப் போக்கை வெளிப்படுத்துவீரகள். அதிக பொறுப்புகள் காரணமாகப் பணப்பற்றாக்குறை காணப்படும். ஆரோக்கியத்தில் கணுக்கால் மற்றும் தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. பணியிடத்தில் பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். துணையுடன் அன்பான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நாளை ஊக்கத்தொகை வகையில் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்கிறது. நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். பணியிடச் சூழல் சுமூகமாக இருக்கும். உங்கள் பணிகளைத் திறமையாக முடிப்பீர்கள். துணையுடன் அன்பான தருணங்களைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு சுமாரான நாளாக இருக்கிறது. நீங்கள் ஆற்றலுடனும் உறுதியுடனும் காணப்படுவீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு இருக்காது. துணையிடம் பாதுகாப்பற்ற உணர்வை வெளிப்படுத்துவீர்கள். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் முதுகு வலி ஏற்படலாம்.
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு உகந்த நாளாக இருக்காது. தகுந்த முடிவுகளை எடுக்க இயலாது. பணிகள் அதிகமாகக் காணப்படும். குறித்தநேரத்தில் பணிகளை முடிக்க இயலாமல் கடினப்படுவீர்கள். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.


