Vani Bhojan: கொள்ளை அழகில் ரசிகர்களைச் சொக்கவைக்கும் வாணி போஜன்!

தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையிலிருந்து வந்து கலக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏராளம். அவ்வரிசையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்த நடிகை வாணி போஜனின் அண்மைக்கால புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையிலிருந்து வந்து கலக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏராளம். அவ்வரிசையில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்த நடிகை வாணி போஜன் பச்சை நிறப் புடவையில் ஆளை அசத்தும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால், அந்தப் படத்தின் கதாநாயகியோ அல்லது துணை கதாநாயகியோ என எதைப் பற்றியும் யோசிக்காமல் நடிப்பவர் வாணி போஜன்.

இவர் சின்னத்திரையில் இருந்தபோது சின்னத்திரையின் நயன்தாரா என ரசிகர்கள் அழைத்து வந்தனர். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை 2.4 மில்லியன் ரசிகர்கள்பின் தொடருகின்றனர்.

காதலோ ஹாரரோ தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பினை வெளிப்படுத்தும் தன்மை கொண்ட நடிகை வாணி போஜன் என்ற பேச்சு சினிமா உலகத்தில் உள்ளது.

சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என்கிற சீரியலில் நடித்தார் வாணி போஜன். 2013ம் ஆண்டு ஆரம்பமான அந்தச் சீரியல் 2018 வரை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பானது. இந்தத் தொடர் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை அடுத்து அதன் மூலமாகச் சினிமாவிற்குள் அறிமுகமானார் வாணி போஜன்.

தொடர்ந்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என நடித்து வருகின்றார். செம பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாகவே வாணி போஜன் உள்ளார்.

கடைசியாக இவர் நடிகர் விதார்த்துடன் இணைந்து நடித்த அஞ்சாமை திரைப்படம் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தினை அழுத்தம் திருத்தமாகப் பேசி விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *