“துரந்தர்” படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Advertisements

ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துரந்தர்’. ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ’துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக நடிக்கும் சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார். இப்படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுக்க வெளியானது.

இந்த நிலையில், ‘துரந்தர்’ படத்தின் 8 நாட்கள் வசூல் விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 252 கோடி வசூல் செய்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *