Advertisements

மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி, வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே தான் ஆட்சி நடத்தியதாகக் கூறினார்.
தனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளதாகவும், தோல்விகளையும் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் என்று கூறினார்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க., இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்று தெரிவித்தார்.
Advertisements



