
பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜய் தலைமையில் இன்று வெற்றிப்பெற்ற வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றிப் பெற்று, தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் வெற்றி வாகை சூடினார். வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையடுத்து, வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று தொலைப்பேசி மூலம் விஜய் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று தவெக வெற்றி வேட்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், ஆட்சி அமைப்பது குறித்தும் அமைச்சர்கள் தேர்ந்து எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இதன் பின்னர், இந்த கூட்டத்தில் விஜய் சட்டசபை த.வெ.க. குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான கடிதத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் கையெழுத்திட உள்ளனர்.



