Advertisements

திமுக தலைமையோடு அதன் கூட்டணி கட்சிகள் மோதத் தொடங்கி இருக்கின்றன என்பது இப்போதைய பரபரப்பு செய்தியாக பார்க்கப்படுகிறது
தமிழக அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரையில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் மிகப்பெரிய போர்க்களமாகவே இருக்கும் என்று தெரிகிறது இந்த போர்க்களத்தில் தற்போது மிக வலிமையாக இருக்கும் முதன்மை கட்சியாக திமுக கூட்டணி திகழ்கிறது !
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேச கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலைக் கட்சி ஆதித்தமிழர் பேரவை மனிதநேய மக்கள் கட்சி அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகியவை இடம் பெற்றுள்ளன இந்தக் கூட்டணியை பொருத்தவரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒம்போது இடங்களிலும் சிபிஐ இரண்டிடங்களிலும் சிபிஎம் இரண்டு இடங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களிலும் மதிமுக ஒரு இடத்திலும் முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஒரு இடத்திலும் போட்டியிட்டன.
இதே கூட்டணி தான் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கும் என்பதுதான் இப்போது வரையில் உள்ள சூழ்நிலையாக இருக்கிறது
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும். எங்களால் தான் திமுக கூட்டணி வெற்றி பெறுகிறது என்று போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின்போது இந்தக் கட்சிகள் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்டுப் பிறகு சமாதானத்தை எட்டிப் பிடித்தார்கள் என்பது பழைய செய்தியாகும்இந்த நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கட்டாயமாகக் கூடுதல் தொகுதி ஒதுக்க வேண்டும் என கூட்டணி கட்சிகள் அனைத்தும் தனித்தனியாக முடிவு எடுத்துள்ளன.முதல் கட்டமாகச் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் குரல் எழுப்பி இருக்கிறார்கள்
மதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தேர்தல் சமயம் வரும்பொழுது கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் கட்சியிடம் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்பது எங்களது உரிமை என்று கூறியிருந்தார் இது மட்டுமில்லாமல் வைகோவுக்கு எம்பி பதவி மீண்டும் வழங்கப்படாத நிலையில் மதிமுகவுக்கு கூடுதல் சீட் தராவிட்டால் வேறு மாதிரி முடிவெடுப்போம் எனத் தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துறை வைகோ பேசியதாகச் சொல்லப்படுகிறது.
இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் அளித்துள்ள பேட்டியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது எங்களுக்குக் குறைந்த தொகுதிகளைத் திமுக கொடுத்தது அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் அத்தகைய அணுகுமுறை இந்தத் தேர்தலில் தொடரக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம் ஆகவே திமுக எங்களுக்காக விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்
இதே போல் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக கூட்டணியாக இருந்தாலும் சரி அதிமுக கூட்டணியாக இருந்தாலும் சரி ஒவ்வொரு தேர்தலிலும் கூடுதலான தொகுதிகளைக் கேட்டுப் பெற முயற்சிப்பது தான் வழக்கமானது வாடிக்கையானது. ஒவ்வொரு கட்சியும் கூடுதலாகத் தொகுதியைப் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறு ஒன்றும் இல்லை என்று கூறி இருக்கிறார்
இதற்கிடையே திமுக தலைமையைப் பொறுத்தவரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பார்முலாவையே வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கும் பின்பற்ற வேண்டும் என முடிவெடுத்து இருப்பதாகத் தெரிகிறது. இது மட்டுமல்லாமல் ஏன் கூட்டணி கட்சிகளுக்கான தகுதிகளைக் குறைக்க கூடாது என்றும் ஆலோசிப்பதாகத் தெரிகிறது அதாவது திமுக கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது முதல்வர் மு க ஸ்டாலின் விருப்பமாக இருக்கிறது என்கிறார்கள் இதனைப் புரிந்து கொண்டு தான் கூட்டணி கட்சிகள் இப்போதே தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்
தேர்தலுக்குப் பத்து மாதங்கள் இருப்பதற்கு முன்பாகவே கூட்டணி கட்சிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்து விட்டார்கள்
கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரையில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் போர் குரல் எழுப்பினாலும் வேறு கட்சிகளுக்குத் தாவும் எண்ணம் இல்லை என்றே தெரிகிறது.
இருந்த போதிலும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்கலாமா என அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரையில் உள்கட்சி போர் நடைபெறுவதால் அந்தக் கூட்டணி தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாகப் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களை அதிமுகவில் இணைப்பதற்கான திரை மறைவு வேலைகள் நடைபெற்று வருகின்றன
இதன் முதல் கட்டமாகப் பாட்டாளி மக்கள் கட்சி விவசாய பிரிவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அதன் தலைவர் வீராச்சாமி தலைமையில் தற்பொழுது அதிமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது அல்லாமல் நல்ல கூட்டணி அமைந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கும் அதிமுக மேற்படி திமுக கூட்டணியை உடைத்து தங்கள் பக்கம் எடுப்பதற்கான வேலைகளையும் செய்து வருவதாகச் சொல்கிறார்கள் எனவே எப்போது எந்தக் கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பதை இப்போது சொல்வதற்கில்லை.இருந்த போதிலும் தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் தேவை என்பதில் திமுக கூட்டணி கட்சிகள் தற்போது மிகப் பிடிவாதமாக இருக்கின்றன. ஒருவேளை தொகுதிகள் அதிகப்படுத்தித் தராமல் இருந்தால் என்ன முடிவு எடுக்கலாம் என்பது பற்றியும் இப்போது ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது
இன்னும் போகப் போக இத்தகைய கோரிக்கைகள் பூதாகரமாக வெடிக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது எனவே இந்தக் கூட்டணி போர்க்கொடியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
செய்தித்தொகுப்பு : திரு.போஸ்
Advertisements



