Cyclone Tej :புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Advertisements

வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த 19-ந்தேதி காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது அன்று நள்ளிரவிலேயே தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.

பின்னர் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள இந்த புயலுக்கு ‘தேஜ்’ என பெயரிடப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *