
கடந்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு திமுகவினர் கொள்ளையடித்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தென்சென்னை எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாளை ஒட்டி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு திமுகவினர் கொள்ளையடித்துள்ளனர் என்றும் வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் பெண்கள்,குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் இந்தியாவிலேயே இவ்வளவு மோசமான ஆட்சி எங்கும் நடக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்று கூறிய நிலையில் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம் என்று தெரிவித்தார்.
அதிமுக கூட்டணி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றும் கூறினார்.



