இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,யோகிபாபு நடிக்கும் “சட்னி சாம்பார்” வெப் சீரிஸ்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் புதிய வெப் சீரீஸ் ‘சட்னி சாம்பார்’ பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்ள டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் இந்த வெப் சீரிசை தனது ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.

இதில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி, குமரவேல், காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, ஐஸ்வர்யா, சம்யுக்தா விஸ்வநாத் மற்றும் நம்ரிதா ஆகியோரும் நடிக்கவுள்ளார்கள்.

பிரபல தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர் சுந்தர்ராஜன் இந்தத் சீரிஸில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார், இதில் இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகிய மூன்று குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.

பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார், சூப்பர் சிங்கர் போட்டியில் வென்று புகழ் பெற்ற அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படங்களில் பணியாற்றிய எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸுக்கான வசனங்களை எழுதியுள்ளார். ஜிஜேந்திரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, K கதிர் கலை இயக்கம் செய்கிறார்.

இந்த வெப் சீரிஸ் குறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்..,“சட்னி – சாம்பார்’ சீரிஸின் படப்பிடிப்பை, அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உட்பட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்” என்றார்.

நடிகர் யோகிபாபு கூறுகையில்.., “சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும்படியான ஒரு அருமையான சிரீஸாக “சட்னி சாம்பார்” இருக்கும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *