வீரர்களுக்கு சௌர்ய சக்ரா விருது வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர்!

தில்லியில் பாதுகாப்புப் படையினருக்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சௌர்ய சக்ரா விருது வழங்கி கௌரவித்தார்.

தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் வீரத்தையும் அசாதாரண துணிச்சலையும் வெளிப்படுத்திய பாதுகாப்புப் படையினருக்கு சௌர்ய சக்ரா விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு வீரர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார்.
அப்போது, இந்திய ராணுவத்தின் துணை கர்னல் நிதேஷ் பாரதி சுக்லா, காவல் ஆய்வாலர் லக்ஷ்மண் கேவத், சத்தீஸ்கர் காவல்துறையின் காவல் ஆய்வாளர் ராமேஷ்வர் பிரசாத் தேஷ்முக் ஆகியோருக்கு சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பிற்காக ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியதற்காக இவர்களுக்கு இந்த உயரிய வீர விருது வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *