Kallakurichi incident:சொன்னதை செய்து காட்டிய பாஜக!

Advertisements

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பாஜக சார்பாக அதன் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலா ஒரு லட்சம் வழங்கியுள்ளார்.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை 150க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர். இதில், குடித்தவர்கள் அனைவருக்கும் வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், அண்ணாமலை உள்ளிட்ட பலர கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சி விரைந்தனர். அங்கு உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

அப்போது பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு மத்திய அரசுத் திட்டங்கள் விரைவாகக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அண்ணாமலை உறுதி அளித்திருந்தார். அதன்படி அண்ணாமலையின் உத்தரவின் பேரில் பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கட்சி நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விரைந்து கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த 29 குடும்பங்களுக்கு முதற்கட்டமாகப் பாஜக சார்பாக அதன் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலா ஒரு லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதைப் பெற்றுக்கொண்ட பெண்கள் கண்ணீர் மல்க அவருக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *