சக மாணவர்கள் தாக்கியதில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 2 மாணவன்…!

Advertisements

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள பட்டீஸ்வரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ வகுப்பு படித்து வந்த கவியரசன் என்ற மாணவனும் அவனின் நண்பர்கள் மூவரும் சேர்ந்து மூன்று மாதத்திற்கு முன் இதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவனை தாக்கி உள்ளனர்.அம்மாணவனுக்கு மூக்கு உடைந்த நிலையில் நான்கு மாணவர்களும் சேர்ந்து அப்போது பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நிதி உதவி அளித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து அந்த சம்பவம் தொடர்பாக மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் முடித்து வைக்கப்பட்டது.கவியரசன்  என்ற மாணவன் இப்பள்ளியில் மாணவ தலைவர் போல வலம் வந்துள்ளார்.+1 பயிலும் மாணவர்கள் ,+2வகுப்பு பக்கம் வரக்கூடாது என தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பிளஸ் ஒன் வகுப்பு மாணவர்களுக்கும் கவியரசனுக்கும் பகை இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி பள்ளி கழிவறையில் இருந்து வெளியே வரும்போது  மீது பிளஸ் ஒன் பயிலும் மாணவன் ஒருவன் கவியரசனை இடித்ததாக கூறப்படுகிறது.அதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கும் கவியரசனுக்கும் அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் 4ஆம் தேதி மாலை கவியரசன் பள்ளியின் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில் அருகில் வந்தபோது பிளஸ் ஒன் பயிலும்  மாணவர்கள் சிலர் கவியரசனை தாக்கி உள்ளனர்.பதிலுக்கு கவியரசனும் பிளஸ் ஒன் மாணவர்களை தாக்கியுள்ளார். பிளஸ் ஒன் மாணவர்கள் தாக்கியதில் கவியரசனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே பட்டீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் இருந்துள்ளது. அங்கு கவியரசனக்கு முதலுதவி அளிக்கப்பட்டு,கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இங்கும் முதல் உதவி செய்யப்பட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தலையில் ஏற்பட்ட ரத்த கசிவிற்காக அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இதற்கிடையில் கவியரசனை தாக்கியதாக கூறப்பட்ட 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தஞ்சாவூரில் உள்ள இளம் சிறார் நீதி குழுமம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.இவர்களை அரசு காப்பகத்தில் 12 நாட்களுக்கு வைக்க நீதிபதி உத்தரவிட்ருக்காங்க.இந்நிலையில் 6ஆம் தேதி மதியம் கவியரசனின் உடல்நிலையில் கடும் பின்னடைவு ஏற்பட்டதால் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இருந்து  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் காவல் துறையினர் கவியரசன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருடன் உள்ளதாகவும், மூளைச்சாவு அடைந்து விட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்தனர்.இந்நிலையில் நள்ளிரவில் மூளைச்சாவு அடைந்த மாணவன் கவியரசன் உயிரிழந்ததா மருத்துவர்கள் தெரிவிச்சுருக்காங்க.கவியரசன் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய மார்ச்சுவரிக்கு  எடுத்துச் செல்ல முயன்ற போது உறவினர்கள் தடுத்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு மாணவன் உயிரிழந்ததும், இது தொடர்பாக 15 மாணவர்கள் கைது செய்யப்பட்டதும்,கும்பகோணம் மற்றும் பட்டீஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது

மாணவனின் உடல் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியரோ – ஆசரியரோ மாவட்ட நிர்வாகமோ,பள்ளி கல்லூரி துறை அதிகாரிகளோ – ஆட்சியரோ வந்து இன்னும் அந்த மாணவன பார்க்கல, கைது செய்யப்பட்டுள்ள 15 பேர் மட்டுமல்ல – மேலும் 10 பேர் உள்ளனர்.அவர்களையும் கைது செய்ய வேண்டும். அனைவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் னு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணத்தில நடந்த இந்த சம்பவம்,பள்ளி மாணவர்களுக்குள் உருவாகும் வன்முறை எவ்வளவு தீவிரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.சில மாதங்களுக்கு முன் தொடங்கிய சிறிய மோதல், பள்ளிக்குள் மற்றும் வெளியிலும் பரவிய பகை உணர்வால் கட்டுப்படுத்த முடியாத நிலையுக்கு சென்று,இறுதியில் ஒரு மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.

பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் கண்காணிப்பு இருந்திருந்தால், இந்த துயரமான முடிவைத் தவிர்க்க முடிந்திருக்கலாம் என்ற கேள்வி சமூகத்தில் எழுகிறது.கவியரசனின் மரணம் மாணவர் பாதுகாப்பு, பள்ளி ஒழுங்கு, மாணவர் மனநலன் மற்றும் வன்முறை தடுப்பது போன்ற தலைப்புகளில் அரசும், கல்வித் துறையும், பள்ளிகளும் தீவிரமாக கவனம் செலுத்த வேண்டிய தேவை இருப்பதை உணர்த்துகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *