சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப்பொருட்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு தன்னுடன் வணிகம் செய்யும் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென்கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பதாக அறிவித்துள்ளது.
சீனாவுக்கு அதிகப்பட்சம் 40 விழுக்காடும், வியட்நாமுக்கு 35 விழுக்காடும், மற்ற நாடுகளுக்கு 20 முதல் 25 விழுக்காடும் வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் உள்நாட்டுத் தொழில்கள், வணிகம் ஆகியவற்றைக் காக்கும் வகையில் இந்த வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அதிபர் டொனால்டு டிரம்ப் விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.



