திமுக கூட்டணி இறுதி முடிவு : யாருக்கு எத்தனை தொகுதி?

Advertisements
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதிமுக என பல்வேறு தரப்பினர் கூடுதல் தொகுதிகள் கேட்டு போர்க்கொடி பிடித்து வரும் நிலையில் திமுக வை பொருத்தவரையில் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. அதன்படி எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதும் ஒதுக்கப்பட்டு விட்டது .
தற்பொழுது திமுகவை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட விவரம் வெளியே கசிந்து உள்ளது . காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் திமுக தரப்பில் 41 தொகுதிகள் தங்களுக்கு தரப்பட வேண்டுமென தற்போது கேட்டு வருகிறார்கள். ஆனால் கடந்த முறை 25 தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டன. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது தற்பொழுது கூடுதலாக மூன்று தொகுதிகளை ஒதுக்கி காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது இல்லாமல் அமைச்சரவையில் இடம் வேண்டுமென காங்கிரஸ் கட்சியினர் கேட்டு வருகின்றனர் இதற்கு பதிலாக ஒரு ராஜ்யசபா இடத்தை தருவதற்கு திமுக முடிவு செய்துள்ளது . இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்பொழுது திருமாவும் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகிறார்.  இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன .  இதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சி விவகாரம் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது
வைகோ பால்சாமி தலைமையிலான,  மதிமுக கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது . இந்த முறையும் அதே ஆறு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. . மதிமுக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என தெரிகிறது. இதேபோல் மார்க்சிஸ்ட் , கம்யூனிஸ்ட் கட்சி,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளும் கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டன. அதேபோல் இந்த தேர்தலிலும் 6 தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது .
மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்கள்,  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மூன்று இடங்கள் , மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் , தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு இரண்டு இடங்களில் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையத்திற்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்படுகின்றன .
இதுவல்லாமல் , பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கூட்டணி சேர்ந்தால் எட்டு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  மேலும் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது . இதனிடையே மருத்துவர் ராமதாசை திமுகவில் இணைக்காமல் வேறு விதமான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் வட மாவட்டங்கள் உள்பட 30தொகுதிகளில் தனியாக போட்டியிட்டு தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது .
இதுவல்லாமல் தமிமுன் அன்சாரி நடிகர் கருணாஸ் ஆகியோரும் இந்த முறை திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள் . முன்னதாக திமுக தரப்பில் 170 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு இருந்தது.  தற்பொழுது திமுக தரப்பில் 160 தொகுதிகளில்  நேரடியாக போட்டியிடுவது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது .
இதுவல்லாமல்,  கூட்டணி கட்சிகளை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி , கொங்குநாடு மக்கள் கட்சி,  தமிழக வாழ்வுரிமை கட்சி,  எஸ்டிபிஐ ,  தனியரசு ஆதித்தமிழர் பேரவை ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது .
இந்த பட்டியலில் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டுமானால் கடைசி கட்டத்தில் மேலும் இரண்டு தொகுதிகளை கூடுதலாக்கி 30 தொகுதிகள் வரை தரலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *