உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போகும் கூட்டணி கட்சிகளின் பட்டியல்..!

Advertisements

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற இருக்கின்றனர், அதற்கான உத்தேச பட்டியல் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு அரசியல் விறுவிறுப்படைந்துள்ளது. கூட்டணி வியூகங்கள், புதிய கட்சிகளின் வருகை, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோஷம் ஆகியவை தமிழக அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தேமுதிக, பாமக ராமதாஸ் அணி, ஓபிஎஸ் தவிர அனைத்து கட்சிகளும் ஓரளவிற்கு கூட்டணியை இறுதி செய்துவிட்டன. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்தும் அவர்களுக்கு ஒதுக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை குறித்தும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சி திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியாகும். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 63 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளிலிம், 2016-ம் ஆண்டு 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை பெற்றது.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்களும் இந்த முறை அதே ஆறு தொகுதியில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.125 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை விஜயின் வருகையால் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட திமுக விரும்புகிறது. இந்த முறையும் மெஜாரிட்டியை தக்க வைக்க திமுக குறைந்தது 170 முதல் 180 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

திமுக கூட்டணி 2026 தேர்தல் உத்தேச பட்டியல்

காங்கிரஸ் – 30 + 1 ராஜ்ய சபா
விசிக – 12
தேமுதிக – 8 + 1 ராஜ்ய சபா
மதிமுக – 6
இ.கம்யூ – 6
மா.கம்யூ – 6
மு.லீக் – 3
மநீம – 3

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் – 74

உதயசூரியன் சின்னம்
மமக – 3
கொமதேக – 3
தவாக – 2
SDPI – 2
தமிமுன் அன்சாரி – 1
கருணாஸ் – 1
தனியரசு – 1
ஆதி தமிழர் பேரவை – 1
ஸ்ரீதர் வாண்டையார் – 1
உதயசூரியன் நேரடி போட்டி – 160 தொகுதிகள்

2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதை சமாளிக்க திமுக தனது கூட்டணி கட்டமைப்பை மிகவும் கவனமாக செலுத்தி வருகிறது. இந்த தகவல்கள் தற்போது அரசியல் நகர்வுகள் மற்றும் ஊடக செய்திகளின் அடிப்படையிலானவை மட்டுமே. அதிகாரப்பூர்வ தொகுதி பங்கீடு தேர்தல் அறிவிப்பு அறிவிப்புக்குப் பின்னரே முழுமையாக வெளியாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *