2ம் ஆண்டில் தவெக.. புதிய அரசியல் அதிகார பார்வை!

Advertisements

சென்னை:

நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தினார்.

இந்த மாநாட்டில், கட்சியின் கொள்கை தலைவர்களாகத் தந்தை பெரியார், அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் பெயர்களை அவர் அறிவித்தார்.

இதற்கிடையே கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடக்க உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து, கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவிக்கப்பட்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோரின் சிலைகளையும் அலுவலகத்தில் விஜய் திறந்து வைக்கிறார்.

நல உதவிகளையும் அவர் வழங்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து விஜய் தனது சுற்றுப்பயண விவரத்தை அறிவிக்க இருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *