ராமதாசுக்கு தவெகவில் இடமில்லை : விஜய் பகிரங்க அறிவிப்பு.! 

Advertisements
மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையிலேயே அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என விஜய் பரபரப்பு முடிவு எடுத்திருக்கிறார் . எப்படியும் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த மருத்துவர் ராமதாஸ் திடீரென திமுகவுக்கு எதிராக போர் கொடி பிடித்த நிலையில் தற்பொழுது தலைகீழான முடிவு ஏற்பட்டிருக்கிறது .
இது மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி செய்தியாகும் . பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாக உடைந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தற்போது யாருடனும் கூட்டணி வைக்க முடியாத சூழ்நிலையில் திண்டாடி வருகிறது .
ஏற்கனவே , அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி , அதிமுக,  பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டதால் திமுக தரப்பில் கூட்டணி வைக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது . ஆனால் , விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் இந்த கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.  பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் இடத்தில் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என பகிரங்கமாக அறிவித்துவிட்டார் .
இதனைத் தொடர்ந்து,  திமுகவுடன் கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் தற்போது மருத்துவர் ராமதாஸ் திமுகவுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார் . இறுதியாக தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து விடலாம் என்ற நம்பிக்கையில் அவர் திமுகவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் .
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் தலைமையில் இதற்கான ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தது . இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் கபட நாடகமாடுவதாக ஒரு தகவல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது . இதன் காரணமாக ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவர் ராமதாஸ் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் .
மருத்துவர் ராமதாஸ்,  சினிமாவுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர் என்பது மட்டுமல்லாமல் மூத்த தலைவரான அவரை கையாளுவதில் சிரமம் ஏற்படும் என விஜய் கருதுகிறார் . இது மட்டுமில்லாமல்,  மருத்துவர் ராமதாஸ் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அங்கிருந்து தேர்தல் நிதி பெற்றுவிட்டதாகவும் ஒரு தகவல் விஜய்க்கு சொல்லப்பட்டு இருக்கிறது .
இதன் காரணமாக . மருத்துவர் ராமதாசை தமிழக வெற்றி கழகத்துடன் இணைத்துக்கொள்ள நடிகர் விஜய் விரும்பவில்லை . இது தொடர்பான தகவலை தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன் மூலம் ராமதாஸ் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
முன்னதாக ராமதாஸ் ஆதரவாளரான ஜி கே மணி தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.  தற்பொழுது அவரது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது . இந்த நிலையில் மருத்துவர் ராமதாஸ் யாருடனும் கூட்டணி சேர முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது .
ஏற்கனவே , அன்புமணி தரப்பிலான பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த போது மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியை எந்த காரணம் கொண்டும் கூட்டணி சேர்க்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
எனவே அதிமுக பாஜக கூட்டணியில் சேர முடியாத நிலையில் தான் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது .
ஆனால் அங்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தடையாக இருக்கிறார் . தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்திலும் ராமதாஸ் கூட்டணிக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இந்த தேர்தலில் போட்டியிடுமா என்கிற மிகப்பெரிய சிக்கலில் தவிக்க தொடங்கி இருக்கிறது .
இது தொடர்பாக , மருத்துவர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் . எனவே இன்னும் ஒரு சில தினங்களில் மருத்துவர் ராமதாஸ் தரப்பிலான முடிவு என்ன என்பது அறிவிப்பாக வெளிவரும் என தெரிகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *