இந்த தீபத்திருநாளில், எந்த தெய்வத்தை வழிப்பட்டால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்? இங்கே பார்ப்போம்.
இந்திய அளவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள பலதரப்பட்ட மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று, தீபாவளி. இந்த தினம் வந்துவிட்டாலே பட்டாசுகளுக்கும், பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் பஞ்சமே இருக்காது. அதே சமயத்தில் பலர் தீபாவளியன்று கோயில்களுக்கு சென்று சாமி கும்பிடுவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். அப்படி, எந்த கோயிலுக்கு சென்று, எந்த தெய்வத்தை வணங்கினால் எது போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது குறித்த தகவல்களை இங்கு பார்ப்போம்.
திருச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில்:
திருச்சி திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயிலில் தீபாவளி திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் இருக்கும் மூலவரான பெருமாளுக்கு புத்தம் புதிய வஸ்திரங்கள் மற்றும் அணிகல்ன்களால் அலங்காரங்கள் செய்வர். பின்னர், இந்த பெருமாள் பக்தர்களுக்கு சாமி தரிசனம் கொடுப்பார். தீபாவளி திருநாளில் இங்கு செய்யப்படும் சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டால் குடும்பத்தினருக்கே நன்மை ஏற்படுமாம்.
சித்தநதீஸ்வரர் திருக்கோயில்:
திருவாரூருக்கு அருகே உள்ள கோயில், சித்தநதீஸ்வரர் கோயில். கும்பகோணத்தில் இருந்து மிக அருகில் இருக்கும் இக்கோயில், தமிழகத்தில் மிகவும் பிரபலம். இந்த கோயிலில் இருக்கும் மகாலட்சுமியில் தீபவளி தினத்தில் வழிப்பட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். மேலும், மகாலட்சுமியின் பூரண அருள் பெருவதற்கும் இக்கோயில் உதவுகிறது.
மீனாட்சி அம்மன் கோயில்:
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில் ஸ்தலங்களுள் ஒன்று, மீனாட்சி அம்மன் கோயில். தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமையான மற்றும் தொன்மையான கோயில்களுள் இதுவும் ஒன்று. இந்த கோயிலுக்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி, உலகளவில் இருந்து பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். திருமணம் ஆகாதவர்கள், தீபாவளி தினத்தில் இந்த கோயிலுக்கு சென்று வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. அது மட்டுமன்றி, வீட்டில் லட்சுமி அருள் புரியவும் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று வரலாம்.
நிதீஸ்வரர் கோயில்:
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள திருக்கோயில், நிதீஸ்வரர் கோயில். தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்று வழிப்படுவதால் பொருளாதார தடைகள் நீங்கி ஏற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது. நிதி பற்றாக்குறையால் அவதிப்படுவோர் இந்த கோயிலுக்கு சென்று வழிப்பட்டால் அந்த தடைகள் விலகும் என கூறப்படுகிறது. மேலும், வாழ்வில் என்ன தடை ஏற்பட்டாலும் அது விலக இக்ககோயிலுக்கு சென்று வரலாம்.