தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகள் தொடக்கம்.!

Advertisements

தீபாவளித் திருநாளையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் அதற்கான கொண்டாட்டங்களும் ஏற்பாடுகளும் முன்கூட்டியே நடைபெற்று வருகின்றன.

மத்தியப் பிரதேசம் உச்சயினி மகாகாளேஸ்வரர் கோவிலில் தீபாவளியையொட்டி ஐம்பதாயிரம் சதுர அடிப் பரப்பில் மிகப்பெரிய வண்ணக்கோலத்தை வரைந்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு உச்சயினி மகா காளேஸ்வரர் கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் குவாலியரில் உள்ள யமதேவர், மார்க்கண்டேசுவரர் கோவிலில் நரக சதுர்த்தசியையொட்டிச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. உத்தரப் பிரதேசம் அயோத்தியில் சரயு ஆற்றங்கரையில் தீபாவளியையொட்டிப் பல இலட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன.

இதற்கான முன்னேற்பாடாகச் சரயு ஆற்றங்கரைத் திடலில் இலட்சக்கணக்கான அகல்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் இராமர், இலட்சுமணர், காளி ஆகிய வேடமணிந்த கலைஞர்கள் நடனமாடி மகிழ்வித்தனர்.

அயோத்தியில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நடனக் கலைஞர்களும் வாத்தியக் கலைஞர்களும் ஒத்திகை நடத்திப் பார்த்தனர். அயோத்தியில் உள்ள கல்லூரியில் தீபாவளியை முன்னிட்டுக் கலைவிழா நடைபெற்றது. இதில் இராமர் இலட்சுமணர் வேடமணிந்தும், நடமாடியும் மாணவர்கள் மகிழ்ந்தனர்.

தீபாவளியையொட்டி அயோத்தி இராமர் கோவிலில் வழிபடுவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து குவிந்துள்ளனர். இராஜஸ்தானின் அ4மீர் நகரம் தீபாவளியையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *