தீபாவளித் திருநாளையொட்டிப் பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து.!

தீபாவளித் திருநாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர், தற்சார்பு உற்பத்தியையும், 140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பையும், படைப்பாற்றலையும் கொண்டாடுவோம் என்றார்.

இதையடுத்து, இந்தியப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யுங்கள். தொடர்ந்து, நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களில் பகிருங்கள்.

மற்றவர்களும் உள்நாட்டு பொருட்களை வாங்க ஊக்குவியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *