பேருந்துகளில் பயணம் செய்ய 2 இலட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு..!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், தீபாவளி பண்டிகையொட்டி பலரும் சொந்த ஊருக்கு அரசு பேருந்துகள், இரயில்கள், தனியார் பேருந்துக்கள் ஆகியவற்றின் மூலம் செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தீபாவளி பண்டிகையையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என அறிவித்தது.

இதில், சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 760 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 565 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இதைத்தொடர்ந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணம் செய்ய 2 இலட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *