David Miller:இனிமே தான் என்னுடைய ஆட்டத்தைப் பார்ப்பீங்க!

Advertisements

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஓய்வு பெற்றுவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பார்படாஸில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்குச் சென்ற தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கிச் சென்ற நிலையில் ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லரது விக்கெட் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்திவிட்டது.

 

இறுதியாகத் தென் ஆப்பிரிக்கா தோல்வி அடைந்து கண்ணீருடன் வெளியேறியது. குறிப்பாகக் கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்த டேவிட் மில்லர் கதறி கதறி அழுதார். அப்போது அவரைக் கட்டியணைத்து அவரது மனைவி ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் தான் டேவிட் மில்லர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில் தான் டேவிட் மில்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு அறிவிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா அணிக்காகவே தொடர்ந்து விளையாடத் தயாராக இருக்கிறேன். எனது சிறப்பான ஆட்டம் இனிமேல் தான் வரப் போகிறது என்று கூறியுள்ளார். இதுவரையில் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மில்லர், 2439 ரன்கள் எடுத்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *