
வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களைப் நடிகை திஷா படானி பதிவிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டு வெளியான லோஃபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் திஷா படானி. எனினும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
அதன்பின்னர் 2016-ம் ஆண்டு தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர். அதில் தோனியின் காதலியாக நடித்திருப்பார், இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து திஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குங் ஃபு யோகா, பாஹி 2. பரத், மலங், பாஹி 3, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
தற்போது யோதா என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ள அவர், சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இது தான் அவருக்குத் தமிழில் முதல் படம்.

மேலும் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள கல்வி 2898 ஏடி படத்திலும் திஷா படானி நடித்து வருகிறார்.இப்படி மிகவும் எதிர்பார்க்கப்படும் கல்வி, 2898 ஏடி, கங்குவா போன்ற பிரம்மாண்ட படங்களில் நடிப்பதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். குறிப்பாகப் பிகினி உடைகள், அதிக கவர்ச்சியாக உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ட்ரெஸ்ஸில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படங்களுக்கு லைக்குகளும், கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.


