திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாரா.? – ஸ்டாலின் வினா.?

கன்னியாகுமரி, நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர்கள், ஆஸ்டின், பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் ஆகியோரை அறிமுகம் செய்து அவர்களை ஆதரித்துப் பரப்புரை செய்தார். இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஸ்டாலின், திமுகவை ஏழாவது முறையாக ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாரா? என வினவினார். திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட ஒருநாள் போதாது என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *