Dindigul C. Sreenivasan: இனிமேல் செத்தாலும் பா.ஜ., உடன் இல்லை!

பா.ஜ., வால் அதிமுக வளரவில்லை, அதிமுக., வால் தான் பா.ஜ., வளருகின்றது என முன்னாள் அதிமுக அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அதிமுக அமைச்சர், திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:எப்போது இந்தக் கூட்டணியிலிருந்து விலகுவோம் என எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். தற்போது பா.ஜ., என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி. கூட்டணி முறிவால் பழனிசாமி மகிழ்ச்சியாக உள்ளார். பா.ஜ., வால் அதிமுக வளரவில்லை, அதிமுக., வால் தான் பா.ஜ., வளருகின்றது. நாங்கள் இனிமேல் செத்தாலும் பா.ஜ., உடன் கூடவோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக உள்ளவர்கள் யாருடனும் சேர மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *