விஜய் மாநாட்டில் தகராறு: வெளி வராத ரகசியங்கள்..!

Advertisements
மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழக மாநாட்டில் முக்கிய நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தகராறு செய்துள்ள நிலையில் அது பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
மதுரையில் நடந்த தமிழக வெற்றி கழக மாநாட்டில் ஏற்கனவே எதிரிகளாக குற்றம் சுமத்திய பாரதிய ஜனதா கட்சி திமுக கட்சி தவிர அதிமுகவையும் இந்த முறை விமர்சனம் செய்தார் விஜய்.
இந்த மாநாட்டில் அவர் காங்கிரஸ் கட்சி மற்றும் தேமுதிக கட்சி ஆகியவை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் கூட்டணியில் சேர்பவர்களுக்கு ஆட்சியில் பங்கு தரப்படும் என்பதையும் தெளிவாக தெரிவித்தார் .விஜய் நடத்திய இந்த மாநாட்டில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்து கொண்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் பட்டாளம் தான் இது தவிர நடுத்தர வயதுள்ளவர்களும் ஏராளமான பேர் கலந்து இருக்கிறார்கள் அதே சமயம் பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் .
மாநாட்டுக்கு வந்தவர்கள் பத்தாயிரம் கார்களில் வந்ததாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த மாநாட்டை இணையதளம் மூலமாக ஒரு கோடி பேருக்கும் மேல் பார்த்ததாக தெரியவந்துள்ளது .
இந்த மாநாட்டுக்காண பெரும்பாலான செலவுகளை தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஆதவ் அர்ஜுனா தான் செய்திருக்கிறார்.  அவர் பல கோடி ரூபாய் செலவு செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டுமல்லாமல் தனது நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்களை 30 குழுக்களாக பிரித்து களப்பணியும் செய்திருக்கிறார்
இதற்கிடையே விஜய்க்கு பிரத்தியேகமாக ஐந்து கேரவன்கள் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தன ஒரு கேரவனில் விஜயும் இன்னொரு கேரவனில் அவரது தாய் தந்தையரும் மற்ற கேரவனில் விஜய் நண்பர்களும் இருந்தார்கள் . இந்த மாநாட்டு சமயத்தில் ஆதவ் அர்ஜுனா அருண் ராஜ் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
மேடையில் விஜய் மட்டும்தான் பேச வேண்டும் என முதலில் முடிவெடுக்கப்பட்டது ஜான் ஆரோக்கியசாமி தான் இந்த ஆலோசனையை சொல்லி இருக்கிறார் . ஆனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் அருண் ராஜ்ஆகியோர் தங்களுக்கு மேடையில் பேச வாய்ப்பு தர வேண்டும் என்று காரசாரமான வாக்குவாதம் நிகழ்த்தியுள்ளனர் .
இதேபோல் 100 அடி கொடி கம்பம் கீழே சாய்ந்ததும் நடிகர் விஜய் மிகவும் அப்செட் ஆகிவிட்டாராம் அப்பொழுது அவரது தாய் சோபா சந்திரசேகரும் தந்தை சந்திரசேகரும் இதை ஒன்றுமாபெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள் அதன் பிறகுதான்அவர் சமாதானமாகி இருக்கிறார் .
முன்னதாக விஜய் பேச வேண்டிய பேச்சு உரையை அவர் கேரவனில் இருந்தபடி முதல் நாள்  இரவே ரிகர்சல் பார்த்திருக்கிறார் அதன் பிறகு தான் மேடையில் வந்து பேசியிருக்கிறார் .
இந்த மாநாட்டில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதாக இருந்தன ஆனால் கால நேரம் கருதி தீர்மானம் பற்றி வாசிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *