அபின் சிஞ்சு இயக்கத்தில் உருவாகும் புதிய திகில் படம் ‘டிஐஎ’!

இயக்குநர் அபின் சிஞ்சு இயக்கியுள்ள திகில் திரைப்படமான டிஐஎ படத்தின் பூஜை மார்த்தாண்டத்தில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நடிக்கும் அதிரடி திகில் திரைப்படமான டிஐஎ திரைப்படத்திற்கான பூஜை மார்த்தாண்டத்தில் நடைபெற்றது. தீவிரவாத குழுக்கள் மறைந்து இருந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதையும், அதை கண்டுபிடித்து தடுப்பது தொடர்பான மையக்கருவுடன் டிஐஎ படம் உருவாக்கப்படவுள்ளது.

இத்திரைப்படத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை குமரி மாவட்டத்தை சேர்ந்த கிளாட்வின் ஜெபராஜ் தயாரிக்க, அபின் சிஞ்சு இயக்குகிறார்.

இதில் நடிகர்கள் ஆதிபகவான், அபி, பெர்சிலின் ராஜ், மனீஷ், ஷாமிலி, சோயா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *