Dharmapuri: பூக்களின் விலை கடும் வீழ்ச்சி!

Advertisements

தருமபுரி மாவட்டத்தில் பலாயிரம் ஏக்கரில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

குறிப்பாக பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் பென்னாகரம், ஜருகு, சாமி செட்டிபட்டி, கெட்டுப்பட்டி, தொப்பூர், கம்பைநல்லூர், மொரப்பூர், மூக்கனூர், உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகபடியாக சாமந்தி, சம்பங்கி, பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது சாமந்திப்பூ சீசன் என்பதாலும் வரத்து அதிகரித்து உள்ளதால் கடந்த ஒரு வாரமாக சாமந்தி கிலோ ரூ.50-க்கும் சம்பங்கி கிலோ ரூ.30 என விற்பனை செய்யப்பட்டது.சாமந்தி, சம்பங்கி வரத்து அதிகரிப்பால் பூ மார்க்கெட்டில் விற்பனையாகாமல் தேக்க நிலை உள்ளதால் பறித்த பூக்களை விவசாயிகள் விலையின்றி ரோடோரங்களில் கொட்டி செல்கின்றனர்.

Advertisements

இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் பூக்களின் விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இன்று சாமந்திப்பூ கிலோ ரூ.10 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்டது.சம்பங்கி கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டதால் அறுவடைக் கூலி கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் ஆதங்கப்பட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது தொடர் மழையால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. வரத்தும் அதிகரித்துள்ளது. இருந்தாலும் பூக்களில் மழை தண்ணீர் இறங்குவதால் பூக்கள் நனைந்து அதன் இதழ்கள் தொங்கி அதன் தன்மையிலிருந்து மாறுபட்டு அழுகி வருகிறது.

மீதமுள்ள தரமானஅறுவடை செய்த பூக்களை வாங்குவதற்கு வியாபாரிகள் வருவதில்லை கிலோ ரூ.10 முதல் ரூ.30-க்கு கூவி கூவி விற்பனை செய்யும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என கவலையோடுதெரிவித்தனர்.இன்று தருமபுரி நகரப் பஸ் நிலையத்தில் இயங்க வரும் பூ மார்க்கெட்டில் சன்ன மல்லி ரூ.550, குண்டு மல்லி ரூ.400, காக்கட்ட ரூ.400, ஜாதி மல்லி ரூ.250, மூக்குத்தி பூ ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.300, கோழி கொண்டை ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *