மகளிர் குழுவுக்கு ₹3,000 கோடி கடன் !

பெருந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாகக் காரில் ஈரோட்டுக்கு முதலமைச்சர் விஜய் சென்றார். விஜயமங்கலம் தாண்டியதும் சிப்காட் பகுதி வழியாக முதலமைச்சர் விஜய் ‘ரோடு ஷோ’ சென்றார். அப்போது, வழிநெடுக சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் த.வெ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பெருந்துறை செல்லும் வழியில் பெருமாநல்லூரில் முதலமைச்சர் விஜயுடன் அத்திக்கடவு அவினாசித் திட்டப் போராட்டக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்தினர். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு விவசாயிகள் வெற்றிலை மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர் அத்திக்கடவு அவினாசித் திட்டத்தில் சரியாக ஆய்வு செய்யவில்லை எனவும், 1400 குட்டைகள் விடுபட்டுள்ளதாகவும் முதலமைச்சரிடம் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்களுக்கு 3000 கோடி ரூபாய் வங்கிக்கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்கையும் பார்வையிட்டார். இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், ஆனந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *