ஆந்திராவுக்கு மத்திய அரசு உதவி!

ஆந்திரத்தில் புயல் மழை வெள்ளப் பாதிப்புக் குறித்து முதலமைச்சர் சந்திர பாபுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆந்திரத்தில் கரையைக் கடந்த முரசு புயலால் பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சூறைக்காற்றால் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு புயல் மழை வெள்ளப் பாதிப்புக் குறித்துக் கேட்டறிந்துள்ளார். மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியன பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் ஆந்திர மக்களின் பக்கம் எப்போதும் இந்திய அரசு இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *