முரசு புயலின் கோரத்தாண்டவம்….ஆந்திராவில் பெரும் சேதம்!

ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்த முரசு புயல் பல மாவட்டங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் உருவான முரசு புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலைக்குள் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் நரசாப்பூருக்கும் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதுடன், கனமழையும் பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், பல இடங்களில் மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன.

பிரகாசம் மாவட்டத்தில் கனமழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையோரங்களில் நின்ற மரங்கள் முறிந்தும், வேருடன் சாய்ந்தும் விழுந்தன. இதனால் மின் கட்டமைப்புகளும் சீர்குலைந்துள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்களை மீட்டுப் பள்ளிகளில் அமைத்துள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *