
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 12 ஆவது முறையாக தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
கடந்த நவம்பர் மாதம் 28- ஆம் தேதி செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவினை மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு மனு தாக்கல் செய்தது. அப்போது உச்சநீதிமன்றம் கடுமையான நோய் எதுவும் இல்லை என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் மீண்டும் மருத்துவ காரணங்களைக் காட்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்தது. அம் மனு மீதான விசாரணை இன்று வந்த நிலையில் 12 ஆவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.


