“இஸ்ரேல் அமைச்சர்கள் நன்றியற்றவர்கள்” – துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றச்சாட்டு!

Advertisements

இஸ்ரேல் அமைச்சரவையில் உள்ள சில உறுப்பினர்கள் நன்றியற்றவர்களாக உள்ளனர் என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மந்திரி பென்-க்விர் விமர்சித்திருந்ததார். அதில், அந்த ஒப்பந்தத்தால் இஸ்ரேல் கட்டுப்படுத்தப்படவில்லை என்று கூறியிருந்தார். இது தொடர்பாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் செய்தியாளர்களிடம் பேசியபோது, இஸ்ரேல் நாட்டின் மீது அனுதாபம் கொண்ட உலகின் ஒரே அரசுத் தலைவர் டிரம்ப் மட்டுமே என்று குறிப்பிட்டார்.

 

இஸ்ரேல் அமைச்சரவையில் உள்ள சில உறுப்பினர்கள் நன்றியற்றவர்களாக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார். அமெரிக்கா வழங்கிய நிதியில் வாங்கப்பட்ட பெருமளவிலான ஆயுதங்களைக் கொண்டே இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக்கொண்டது என்று கூறினார். இஸ்ரேல் நாடு தற்போதுள்ள யதார்த்த நிலையை உணர்ந்து விழித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *