இயக்குநர் பா.ரஞ்சித் உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, அசோக் செல்வன், சோபிதா துலிபாலா, அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றிய மோகன் ராஜ் என்பவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

வேட்டுவம் படத்தில் கார் பாய்ந்து செல்வது போன்ற காட்சியை படம்பிடித்த போது நடந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த ஸ்டண்ட் ஷூட்டிங் காட்சியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக ரஞ்சித் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரை கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் 20 லட்சம் ரூபாய் வழங்கி நிதியுதவி செய்துள்ளார்.

இதேபோல் நடிகர் சிம்பு மோகன்ராஜ் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.முன்னதாக, ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழப்பின் எதிரொலியாக பிரபல ஹிந்தி பட நடிகரும் ரஜினியின் 2.0 படத்தில் நடித்தவருமான அக்ஷய் குமார் நாடு முழுவதும் உள்ள சுமார் 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு இன்சூரன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இதன் மூலம் ஸ்டண்ட் கலைஞர்கள் விபத்து ஏற்படும்போது அவர்களால் 5 முதல் 5 லட்சம் வரை எந்தவித செலவும் இல்லாமல் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *