
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளைப் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவுக்கு 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 22-ந்தேதி பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவுக்கு 2 – 3° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23 மற்றும் 24-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவுக்கு 2-4° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25 மற்றும் 26-ந்தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
