
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் இந்தியாவின் பிவி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும் மோதினர்.முதல் செட்டை கரோலினா வென்றார். 2-வது செட்டை பிவி சிந்து கைப்பற்றினார். வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் பிவி சிந்து தோல்வியடைந்தார்.
இந்தப் போட்டியின்போது பிவி சிந்துவும், கரோலினாவும் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இருவரும் இதற்கு முன் பல போட்டிகளில் மோதியுள்ளனர்.இருவருக்கும் நடுவர் மஞ்சள் அட்டை கொடுத்து எச்சரித்தார்.கரோலினா ஒரு சர்வீஸை வென்றதும் நீண்ட நேரம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதாகப் பிவி சிந்து கோபம் கொண்டார். சர்வீஸ் செய்யப் பிவி சிந்து நீண்ட நேரம் எடுத்துக் கொண்டதாகக் கரோலினா குற்றம்சாட்டியதால் வார்த்தைப்போர் ஏற்பட்டது
