Amala paul:பாலி தீவில் ஜாலி ..வெளியான கிளாமர் போட்டோஸ்!

நடிகை அமலா பால், பாலி தீவில் கவர்ச்சி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம் எனத் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார்.

தென்னிந்திய மொழி படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் தனது நீண்ட நாள் காதலரைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் குடும்ப வாழ்க்கையை என்ஜாய் செய்து வரும் அமலா பால், ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதன்படி மலையாளத்தில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் நடிப்பில் ‘லெவல் கிராஸ்’ என்ற படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.

குடும்ப வாழ்க்கை ஒருபக்கம், சினிமா மறுபக்கம் என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் அமலா பால், கணவர், குழந்தையுடன் பாலித் தீவில் வெகேஷனை என்ஜாய் செய்து வரும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவுட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் பாலி தீவில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது அமலா பாலின் கவர்ச்சி புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *