போரட்டத்தை தூண்டிவிட்ட அதிபர் டிரம்ப் ஒரு குற்றவாளி.!

ஈரானில் போரட்டத்தை தூண்டிவிட்ட அதிபர் டிரம்ப் ஒரு குற்றவாளி என ஈரான் உச்ச தலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. இதனால், ஈரான் பொருளாதார நெருக்கடியடைந்ததையடுத்து, தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போராடினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. தொடர்ந்து, வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில் ஈரான் போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம் சாட்டினார். ஈரான் தொலைக்காட்சியில் இதுகுறித்து கமேனி பேசியபோது, அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது என்றார்.

உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுவதாகத் தெரிவித்தார்.

போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள் என்றும் அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர் என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *